தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

23 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்களில் மட்டும் தான், 27 விழுக்காட்டை விட கூடுதலாகவோ, குறைவாகவோ ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்த வரை ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் 50%க்கும் கூடுதலான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான அந்த இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% அல்லது அதற்கும் கூடுதலான இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: