×

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மழைநீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மந்தமாக நகர்வதை பார்த்தால் வடகிழக்கு வருவ மழை ஆரம்பித்து முடிந்துவிடும் போல் உள்ளது. மேலும் இதனால் ஏற்கனவே இருந்த பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பாக தான் இருக்கும். கே.கே. நகர், அசோக் நகர், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பாதியில் நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஆகவே சென்னை மாநகராட்சியில் விரைவில் பணிகளை இடைநிற்றல் இல்லாம் தொடர்ந்து விரைவாகவும், முழுமையாகவும் முடிக்க வேண்டும்.

Tags : Chennai Municipal Corporation ,G. K. Vasan , Chennai Municipal Corporation, Rainwater Drainage Works, GK Vasan
× RELATED ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம்...