×

பந்திக்கு முந்து என்ற பாணியில் யார் அழைத்தாலும் பாயுடன் படுப்பதுதான் ஓபிஎஸ் வேலை: ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை: பந்திக்கு முந்தி, படைக்குப் பிந்து என்ற பாணியில் யார் அழைத்தாலும் பாய் போட்டு படுத்துவிடுவதுதான் ஓபிஎஸ் வேலை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக தாக்கி பேசினார்.

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி:
ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் பந்திக்கு முந்தி, படைக்குப் பிந்து என்று ஓ.பன்னீர்செல்வம் குழு சென்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அதிகாரமும் கிடையாது, கட்சியிலும் அவர் கிடையாது. யாராவது ஒருவர் அழைக்கமாட்டார்களா என்று முந்திக்கொண்டு பாய் போட்டுப் படுத்து விடுவது தான் அவர் வேலை. எங்களால் தான் அதிமுகவினர் தோற்றார்கள் என்று டிடிவி சொல்கிறார்.

ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தால் உண்டு கொழுத்தவர்கள் இன்று அதிமுகவை விமர்சனம் செய்வது என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். ஓ.பன்னீர்செல்வத்திடம் மொத்தம் 80 பேர் தான் உள்ளார்கள். கட்சியை விட்டு நீக்கினால் அவர்(ஓபிஎஸ்) சுயேட்சை என்று விதிகளில் தெளிவாக உள்ளது. அவர் சுயேட்சை எம்ஏல்ஏ தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : OPS ,Jeyakumar , OPS, AIADMK, Jayakumar
× RELATED வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற...