கடந்த 14ம் தேதி மட்டும் ரூ.273 கோடிக்கு மது விற்பனை

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) டாஸ்மாக்  கடைகளுக்கு விடுமுறை அறிவித்ததால் கடந்த 14ம் தேதி மட்டும் ரூ.273.92 கோடிக்கு மது விற்பனையானது. திங்கள் கிழமை நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று முன் தினம் (திங்கள் கிழமை)  தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

இதையொட்டி மது பிரியர்கள் ஆகஸ்ட் 14ம் தேதியே தங்களக்கு தேவையான   மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் வாங்கி சென்றனர். இதனால் அன்றைய தினம்  டாஸ்மாக் கடைகள் அதிகம் கூட்டம் காணப்பட்டது. அந்த வகையில், ஆக.14ம்  தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.273.92 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை  செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை  மண்டலத்தில் ரூ.55.77 கோடிக்கும்,திருச்சி மண்டலத்தில் ரூ.53.48  கோடிக்கும்,சேலம் மண்டலத்தில் ரூ.54.12 கோடிக்கும்,மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கும், கோவையில் ரூ.52.29கோடிக்கும் விற்பனை நடைபெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: