×

தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.472 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், சனிக்கிழமை விலையே தங்கம் விற்பனையானது. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று முன்தினம் தொடங்கியது.

அதில் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது. இந்நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி சரிவை சந்தித்தது. அதாவது, காலையில் கிராமுக்கு ரூ.38 குறைந்து ஒரு கிராம் ரூ.4,876க்கும், சவரனுக்கு ரூ.304 குறைந்து ஒரு சவரன் ரூ.39,008க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது.

அதாவது, நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.59 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4855க்கும், சவரனுக்கு ரூ.472 குறைந்து ஒரு சவரன் ரூ.38,840க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை சவரன் ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.

Tags : Gold Price, Silver Price, Trading, Selling
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...