இலவசம்னு சொல்றதை நிறுத்துங்கள்: கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: டெல்லியை போல் மற்ற மாநிலங்களில் சுகாதார சேவை, கல்வியை ஒன்றிய அரசு மேம்படுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், ‘இலவச சுகாதார சேவைகள் மற்றும் இலவச கல்வியை ‘இலவசங்கள்’ என்று பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு கூற வேண்டாம். வாக்காளர்களை கவர்வதற்காக இலவசங்களை பயன்படுத்துவதாக பாஜ குற்றம்சாட்டியதால் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எனவே, அவற்றை இலவசங்கள் என்று அழைப்பதை நிறுத்துமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அரசு பள்ளிகளை மேம்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் இந்தியா செழிப்பு மிக்க நாடாக மாற முடியும்,’’ என்றார்.

Related Stories: