வழிபாட்டு தலங்களிலும் நடத்தலாம் பூஸ்டர் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்கள்: மாநிலங்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போடும்படி ஒன்றிய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, 75 நாட்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆகஸ்ட் 15ம் தேதி நிலவரப்படி நாட்டில் 74.5 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி பெற்றுள்ளனர். ஆனால், இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரையில் 17 சதவீதம் பேர் (12.36 கோடி) மட்டுமே பூஸ்டர் போட்டுள்ளனர். இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பொது இடங்களில் தடுப்பூசி முகாம்களை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும், கார்பெவாக்ஸ் தடுப்பூசி பூஸ்டர் டோசாக பயன்படுத்துவதை விளம்பரம் செய்ய வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: