காட்டு யானைகள் தாக்கி 3 பேர் பலி

கவுகாத்தி: அசாமில் காட்டு யானைகள் தாக்கியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். அசாம் மாநிலம், கோல்பாரா மாவட்டத்தில் உள்ள குருங் கிராமம், வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. மேகாலயா எல்லைக்கு அருகிலும் இது உள்ளது. இந்த கிராமத்தில் காட்டு யானைகள் அடிக்கடி உணவுக்காக நுழைந்து அட்டகாசம் செய்வது அடிக்கடி நடக்கிறது. இக்கிராமத்தில் நேற்றும் காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்தன.  திடீரென வந்த அவற்றை பார்த்த கிராம மக்கள்,  அங்கும் இங்குமாக ஓடி தப்பிக்க முயன்றனர், அப்போது, அவர்களை யானைகள் துரத்தின. அவை தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக அதே இடத்தில் இறந்தனர்.  மேலும் பலர் காயமடைந்தனர். யானைகள் சென்ற பிறக, அவர்கள் மீட்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பும், இதே போல் இக்கிராமத்தில் யானைகள் நுழைந்து தாக்கியதில் ஒருவர் பலியானார்.

Related Stories: