பெரியபாளையத்தில் போதை விழிப்புணர்வு பேரணி

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் மாதா கோயில் தெருவில் உள்ள புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை  வலியுறுத்தும் வகையிலும் போதை பழக்கத்துக்கு எதிராகவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் டி.அருள்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜூதா அன்பரசி முன்னிலை வகித்தார். பெரியபாளையம் மின்வாரிய கட்டிடம் அருகே இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

இதில் போதை பழக்கத்துக்கு எதிராக மாணவர்கள் பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். முன்னதாக சிறப்புஅழைப்பாளராக எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜே.மூர்த்தி கலந்துகொண்டு பேரணியை துவக்கிவைத்து பேசினார்.  பள்ளி வளாகத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் சுதந்திர தின பவளவிழாவை நினைவு கூரும்வகையிலும் போதை பழக்கத்தால் வாழ்க்கை சிதைந்துவிடும் என்பதை விளக்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன்பிறகு பள்ளி மாணவர் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. பள்ளி மாணவர் சங்க தலைவர் ரோஷன், துணைத் தலைவர் ஓவியா ஆகியோர் நன்றி கூறினர்.

Related Stories: