ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8 ஆயிரம் வட்டி தருவதாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவன ஏஜென்டுகள் 2 பேர் கைது

சென்னை: 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.8 ஆயிரம் வட்டி தருவதாக விளம்பரம் செய்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேரிடம் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் ‘இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ்’ நிறுவனத்தின் முக்கிய ஏஜென்டுகளாக இருந்த 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். லூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாக ‘இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ்’(ஐஎப்எஸ்) என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு என தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளை உள்ளது. இந்த நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு வசீகரமான விளம்பரம் ஒன்று வெளியிட்டது. இதில், எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த விளம்பரத்தை நம்பி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

விளம்பரத்தில் கூறியபடி அந்த நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு முதல் 2 மாதங்கள் மட்டும் ரூ.1 லட்சம் பணத்திற்கு மாதம் வட்டியாக ரூ.8 ஆயிரம் தந்துள்ளனர். பிறகு படிப்படியாக இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்த நபர்களுக்கு முறையாக வட்டி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனால் முதலீடு செய்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மற்றும் வேலூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு முறையான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. அதைதொடர்ந்து இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் மீது வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை என தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் மோசடி புகார் அளிக்கப்பட்டது. ரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்ததால், இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி குறித்து விசாரணை நடத்தினர்.

அதில், பொதுமக்களிடம் வசீகர விளம்பரம் செய்து ரூ.1 லட்சத்திற்கு மாதம் வட்டியாக ரூ.8 ஆயிரம் தருவதாக பல கோடி ரூபாய் வசூலித்து பெரிய அளவில் மோசடி செய்தது உறுதியானது. ன்னர் இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கடந்த 5ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான  போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். றிப்பாக, ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியில் வசித்து வரும் ஜனார்த்தனன் வீடு, நிதி நிறுவனத்தின் முக்கிய ஏஜென்ட் சுகுமார் வீடு மற்றும் சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர ஓட்டல் அருகே உள்ள சசி டவர் கட்டிடத்தில் இயங்கி வரும் இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனம், கிண்டி தாமரை டெக் பார்க் கட்டிடத்தில் இயங்கி வந்த அலுவலகத்திலும் சோதனை நடந்தது.

ந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி ‘இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ்’ நிதி நிறுவனத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேர் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்தது தெரியவந்தது. மேலும், துமக்களிடம் வசீகர விளம்பரம் மூலம் மொத்த பணத்தையும் இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள், முகவர்கள் மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து இந்த மோசடி நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.27 கோடி சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிதி நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்து கண்டறியும் பணியிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ்’ நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் 4 பேர் வெளிநாடுகள் தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி நிறுவனத்தின் முக்கிய ஏஜென்டாக செயல்பட்டு ரூ.100 கோடி வசூலித்து கொடுத்ததாக சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மோசடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ந்நிலையில், இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிதி  நிறுவனத்தின் முக்கிய ஏஜென்டாக செயல்பட்ட குப்புராஜ்(45), ஜெகநாதன் (48) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் பல நூறு கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து வசூலித்து இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிதி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும்,இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: