×

பருவமழை காலக்கட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க கூடும்: கவனமுடன் இருக்க வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

சென்னை: டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும், வரக்கூடிய பருவமழை காலக்கட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சென்னை, கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பாதிப்பு குறித்த புள்ளிவிவர பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 23 ஆயிரத்து 294 பேருக்கு டெங்கு பாதிப்பும், 65 உயிரிழந்தாகவும் கூறப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு 4 ஆயிரத்து 486 பேருக்கு பாதிப்பும், 13 பேர் உயிரிழந்தும் உள்ளதாகவும், 2019-ம் ஆண்டு 8 ஆயிரத்து 527 பேருக்கு பாதிப்பும், 5 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு 2 ஆயிரத்து 410 பேருக்கு பாதிப்பும், உயிரிழப்பு எதுவும் இல்லை கூறப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு 6 ஆயிரத்து 39 பேர் பாதிப்பும், 8 பேர் உயிரிழந்தாகவும், இந்தாண்டு இதுவரை 3 ஆயிரத்து 205 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும்,உயிரிழப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய பருவமழை காலக்கட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதார மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள், கொசு ஒழிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags : TN Health Department , Dengue may increase during monsoon period: be careful: Tamilnadu health department warning..!
× RELATED ஸ்டாக் வந்தால் மட்டுமே 18+...