காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று காவல் கட்டுப்பாட்டு அறை மீது கையெறி குண்டு வீச்சு: போலீஸ்காரர் உட்பட 2 பேர் காயம்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புட்காம் மற்றும் நகர் மாவட்டங்களில் நடந்த இரண்டு வெவ்வேறு கையெறி குண்டுத் தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவரும், காவல்துறை அதிகாரி ஒருவரும் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக புட்காம் மாவட்டத்தின் சதுராவில் உள்ள குடியிருப்பு மீதும், நகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மீதும் கையெறி குண்டு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தினர். புட்காமின் கோபால்போரா சதுரா பகுதியில் தீவிரவாதிகள் வீசிய கையெறி குண்டில் கரண் குமார் சிங் என்பவர் காயமடைந்தார்.

அவர் சிகிச்சைக்காக நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல்  நகரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த சம்பவங்களால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: