×

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு

சென்னை: சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கெனவே நேற்று முன்தினம் 18 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில் இன்று 13.7 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல், அங்கு பணிபுரியும் வங்கி கிளை காவலாளி மற்றும் மேலாளர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து, சுமார் 31.70 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், 48 மணி நேர்தத்தில் 11 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் 3 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்ட நிலையில், வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று அவர் போலீசில் சரணடைந்தார். பிபி கைது செய்யப்பட்ட அவர்களிடம் சுமார் 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள நகைகள் மற்றும் மற்ற குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், கோவை மற்றும் விழுப்புரத்தில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில் சூர்யா என்ற மற்றொரு கொள்ளையனை கைது செய்த போலீஸ் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரத்தில் தனது நண்பரிடம் நகைகளை பதுக்கி வைத்துள்ளதாக தங்கள் தெரிவித்தார். அடிப்படையில் அங்கு சென்று நகைகளை கைப்பற்றிய போலீசார், அதில் 10 கிலோ நகைகள் இருப்பது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட அனைத்து நகைகளையும் எடைபோட்ட பொழுது, மொத்தம் 13 கிலோ தங்கநகைகள் விழுப்புரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மீதமுள்ள 700 கிராம் தங்கநகைகளை உருக்கி விற்பனை செய்ய முற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, விடுதி ஒன்றில் வைத்து மொத்தமாக உருக்கி, விற்பனை செய்ய முற்பட்டுள்ளனர்.

ஆனால் அதற்குப் சாத்தியமில்லாததால், தனித்தனியாக பிரித்து விற்க முடிவு செய்து வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர். ஆனால் தமிழகம் முழுவதும் 11 தனிப்படைகள் தீவிரமாக தேடி வரும் சூழலில், திருடப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று 18 கிலோ தங்கமும், விழுப்புரத்தில் 13 கிலோ தங்கமும், உருகிய நிலையில் இருந்த 700 கிராம் தங்கமும் சேர்த்து மொத்தமாக 31.70 கிலோ தங்கத்தை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொள்ளை நடந்த 4 நாட்களில் மொத நகையும் கைப்பற்றப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான முருகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மீதமுள்ள குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : Chennai Arumbakkam , Chennai, Arumbakkam, Bank Robbery, 31 Kg Gold, Private Police, Rescue
× RELATED சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை...