முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி தனது 93 வயதில் காலமானார். அவரது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சதைவ் அடல் நினைவிடத்தில், நாட்டின் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர். மேலும் ஒன்றிய  அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமீதா கவுல் பட்டாச்சார்யாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் நாடு முழுவதும் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Related Stories: