கிராமங்களில் கோயில் திருவிழாவிற்கு காவல்துறையின் அனுமதி தேவை இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை: கிராமங்களில் கோயில் திருவிழாவிற்கு காவல்துறையின் அனுமதி தேவை இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வளையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டையரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு பொங்கல் திருவிழா ஆகஸ்ட் 19-ம் முதல் 20 வரை நடத்துவதற்கு திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கோரியும் இதுவரை எந்த பதில்களும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை.

எனவே திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனு அனுப்பியிருந்தார். இந்த வழக்கு  ஜீ.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவசியம் இல்லை என்றும் ஒலிப்பெருக்கி வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி பெற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை பொறுத்த வரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். கோயில் திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருந்தால் மட்டும் அனுமதி பெற்றல் போதும் எனவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார். எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இல்லை எனக்கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை முடித்துவைத்துள்ளார்.

Related Stories: