நவல்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணிப்பு-தலைவருடன் வாக்குவாதம் பரபரப்பு

திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தை நவல்பட்டு கிராம கமிட்டியினர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நவல்பட்டு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் தேசிய கொடி ஏற்றாமல் அண்ணா நகரில் உள்ள வரிவசூல் மையம் பகுதியில் கொடியேற்றி வைத்து உள்ளார். இதனால் நாவல்பட்டு கிராம மக்கள் தொடர்ந்து தங்கள் பகுதியை ஜேம்ஸ் புறக்கணிப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியும் தேசிய கொடியை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏற்றவில்லை.

ஏற்கனவே ஊராட்சி மன்ற அலுவலகம் தொடர்ந்து செயல்படாமல் உள்ளது என்று புகார் கூறி வந்த நிலையில், ஜேம்ஸ் இந்த நடவடிக்கை நவல்பட்டு கிராமம் கமிட்டியினரிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியதுஇந்நிலையில் நவல்பட்டு ஊராட்சி சார்பில் போலீஸ் காலனியில் ஜேம்ஸ் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. திருவெறும்பூர் பிடிஓ ஜோசப் கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு வந்த நவல்பட்டு கிராம கமிட்டியினர் தங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றவில்லை என்றும், மேலும் தங்களது ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படாமல் உள்ளது, தங்களது ஊரை ஊராட்சி மன்ற தலைவர் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருவெறும்பூர் டிஎஸ்பிஅறிவழகன் மற்றும் நவல்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தாங்கள் கலைந்து செல்லுங்கள் மற்ற பிரச்சனைகளை குறித்து அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு ஜேம்ஸ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறை நிறைகளை எடுத்துக் கூறியதோடு தங்கள் பகுதிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

Related Stories: