பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் புரவி எடுப்பு விழா நடந்தது. பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி நல்லாண்டி அய்யனார் கோயில் பள்ளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்குள்ள நெய்நந்தீஸ்வரர் கோயில் முன்பு குதிரைகள்,காளைகள் மற்றும் பரிவார தெய்வங்களின் சிலைகள் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து நல்லாண்டி அய்யனார் கோயில், பள்ளத்து அய்யனார் கோயிலுக்கு இந்த சிலைகள் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு வைத்து வழிபாடு செய்தனர். இதில் வேந்தன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: