தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கர்நாடக வாலிபர் கைது-8 பைக்குகள் பறிமுதல்

ஆம்பூர் :  ஆம்பூரில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட கர்நாடக வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஆம்பூரில் பல்வேறு இடங்களில் அடிக்கடி பைக்குகள் தொடர்ச்சியாக திருடு போனதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து டி எஸ்பி சரவணன் உத்தரவின் பேரில் ஆம்பூர் டவுன்போலீசார் பைக் திருடனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ஆம்பூர் டவுன் போலீசார் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக தெரிவித்ததையடுத்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கர்நாடகமாநிலம் பங்காரபேட்டையை சேர்ந்த கணபதி மகன் அருண்குமார் (35) என்பதும், பங்கார பேட்டையில் இருந்து ரயில் மூலம் ஆம்பூர் வந்து பைக்குகளை திருடி ஒட்டி சென்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசா ஆம்பூர் அடுத்த கம்பிகொல்லை அருகே பதுக்கி வைத்திருந்த 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Related Stories: