×

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 18ம் தேதி கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

நாகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஆகஸ்ட் 18ல் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில இடங்களில் சாரல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Department , Tamil Nadu Region, Atmospheric Downward Circulation, Heavy Rain, Weather Centre
× RELATED மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு...