புலி பட சம்பள விவகாரம்; நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கு: வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை.! ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை மறைத்ததாக கூறி, நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்தார். அதில், அந்தாண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு வருமான வரி துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதில், புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடியை வருமானத்தை கணக்கில் காட்டவில்லை’ என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ரூ.1.5 கோடி அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ம் தேதி வருமான வரி துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ‘அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எனவே காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி,  விசாரணையை செப்டம்பர் 16ம் ேததிக்கு தள்ளி வைத்தார்.

Related Stories: