×

ரூ.161 கோடியில் 16 துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: ரூ.161 கோடியில் 16 துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் தடையின்றி மின்சாரம் கிடைக்கச் செய்யும் நோக்குடன், அதிகரித்து வரும் மின் தேவைக்கு ஏற்றவாறு தற்போது உள்ள மின்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டும், தரம் உயர்த்தப்பட்டும் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சீரான மின் விநியோகத்திற்கு கூடுதல் துணை மின் நிலையம் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்கள் அமைத்தல், இயக்கத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் திறனை மேம்படுத்தும் விதமாக கூடுதல் மின் மாற்றிகள் அமைத்தல் ஆகிய பணிகளை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில்,  செங்கல்பட்டு மாவட்டம் - கண்ணகப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் - மாங்காடு (புதிய விகிதாசார அறிமுகம்), மயிலாடுதுறை மாவட்டம் - கடலங்குடி (புதிய விகிதாசார அறிமுகம்), நாமக்கல் மாவட்டம் -  புதுக்கோட்டை (கெட்டிமேடு), பெரம்பலூர் மாவட்டம் - கைகளத்தூர்,  புதுக்கோட்டை மாவட்டம் - கொன்னையூர் (புதிய விகிதாசார அறிமுகம்), இராணிப்பேட்டை மாவட்டம் -  கலவை (தரம் உயர்த்தப்பட்ட  துணை மின் நிலையம்), சிவகங்கை  மாவட்டம் - சிங்கம்புணரி (புதிய விகிதாசார அறிமுகம்), திருவாரூர் மாவட்டம் - வடுவூர் (புதிய விகிதாசார அறிமுகம்) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் - உடன்குடி (புதிய விகிதாசார அறிமுகம்), பீச் ரோடு (ரோச் பார்க் அருகில்)  ஆகிய இடங்களில் 147 கோடியே 97 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பதினொன்று புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள்;

தர்மபுரி மாவட்டம் - கிருஷ்ணாபுரம் (ஆளில்லா துணை மின் நிலையத்தை ஆட்களுடன் கூடிய துணை மின் நிலையமாக தரம் உயர்த்துதல்), புலிக்கரை (ஆளில்லா துணை மின் நிலையத்தை ஆட்களுடன் கூடிய துணை மின் நிலையமாக தரம் உயர்த்துதல்), கிருஷ்ணகிரி மாவட்டம் - ஆலூர், தூத்துக்குடி மாவட்டம் -  நடுவக்குறிச்சி (ஆளில்லா துணை மின் நிலையத்தை ஆட்களுடன் கூடிய துணை மின் நிலையமாக தரம் உயர்த்துதல்) மற்றும் விழுப்புரம் மாவட்டம் - கீழ்பாப்பம்பாடி (ஆளில்லா துணை மின் நிலையத்தை ஆட்களுடன் கூடிய துணை மின் நிலையமாக தரம் உயர்த்துதல்) ஆகிய இடங்களில்                           13 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து 33  கி.வோ துணை மின் நிலையங்கள்; என மொத்தம் 161 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து  வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் - மறைமலைநகர், சென்னை மாவட்டம் - திருமுல்லைவாயல், ஈ.டி.எல், கடலூர் மாவட்டம் - ஸ்ரீமுஷ்ணம், செம்மங்குப்பம், செம்மண்டலம், திண்டுக்கல் மாவட்டம் - ராமராஜபுரம், அய்யலூர், ரெட்டியார்சத்திரம், அய்யம்பாளையம், கள்ளக்குறிச்சி மாவட்டம் - புதுப்பட்டு, உளுந்தூர்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் - பழைய சீவரம், கன்னியாகுமரி மாவட்டம் - சேரமங்கலம், மீனாட்சிபுரம், கரூர் மாவட்டம் - பள்ளபட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர், குருபரபள்ளி, மதுரை மாவட்டம் - சின்னக்கட்டளை, நாகப்பட்டினம் மாவட்டம் - நரிமணம், பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டம் - கறம்பக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் - கமுதி, பரமக்குடி, சேலம் மாவட்டம் - ஆத்தூர், வெப்படை, கந்தம்பட்டி,

பி.ஜி பாளையம், ஐவேலி, தஞ்சாவூர் மாவட்டம் - சாக்கோட்டை, தேனி மாவட்டம் - வைகை அணை, திருவள்ளூர் மாவட்டம் - பேரம்பாக்கம், மாத்தூர், கடம்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் - மாங்கால், சமுத்திரம், தண்டராம்பட்டு, செங்கம், சந்தவாசல், காஞ்சி, திருப்பூர் மாவட்டம் - வீரபாண்டி, பொங்கலூர், திருச்சிராப்பள்ளி  மாவட்டம் - வேங்கைமண்டலம், தொட்டியம், தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம், ஆறுமுகநேரி, வேலூர் மாவட்டம் - பள்ளூர், விழுப்புரம் மாவட்டம் - செந்தூர், தாயனூர், திருச்சிற்றம்பலம், விருதுநகர் மாவட்டம் - சூலக்கரை ஆகிய இடங்களில் உள்ள 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் அதிகரித்து 97 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

மேற்கூறிய 258 கோடியே 94 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்திட்டங்கள் மூலம் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு தரமான,  தடையில்லா மின்சாரம் வழங்கிட  வழிவகை ஏற்படும். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., எரிசக்தித் துறை கூடுதல்  தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ்சந்த் மீனா, இ.ஆ.ப., தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர்  திரு.மா.இராமச்சந்திரன் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,M.K.Stalin , Chief Minister M.K.Stalin inaugurated the Aavin State Central Laboratory building built at a cost of Rs.8 crore in Madhavaram..!
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...