×

தமிழ்நாடு- கேரள எல்லையில் வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானை: உடனடி சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை

கேரளா: தமிழ்நாடு- கேரள எல்லையான அட்டப்பாடி அருகே வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் யானைக்கு சிகிச்சை அளிப்பது யார்? என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எல்லையாக அட்டப்பாடி உள்ளது. நமது நிர்வாகத்திற்கு எல்லையானது மாநில வாரியாக பிரிக்கப்பட்டாலும், வனவிலங்குகளை பொறுத்தமட்டில் இதுபோன்ற எல்லைகளை பிரிக்க முடியாத ஒன்றாகும். அதற்கு எடுத்துக்காட்டாக, வாயில் காயத்துடன் உலா வரும் யானையின் நிகழ்வு உள்ளது. அட்டப்பாடியில் உலா வரும் யானையானது, தமிழக- கேரள எல்லையில் தொடர்ந்து உலாவிக்கொண்டிருக்கிறது. இங்கு மேலும் பல யானைகள் உலா வருகின்றன.

இந்நிலையில், யானை ஒன்று வாயில் காயத்துடன் வனத்தை விட்டு வெளியேறி, தற்போது குடியிருப்புக்கு அருகாமையில் உலாவிக் கொண்டுடிருக்கிறது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கும் தகல்வல்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காயத்துடன் தென்படும் யானை  தமிழக- கேரள எல்லை பகுதியில் மாறி மாறி சென்று வருவதால் யானைக்கு சிகிச்சை யார் தருவது? என்ற சிக்கல் எழுந்துள்ளது. இச்சூழலில், 2 எல்லைகளின் வனத்துறை அதிகாரிகள் சேர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, யானையின் அருகில் சென்றால் அது மிகவும் முரட்டுதனமாகவும், அருகில் சென்றால் விரக்கூடிய சூழ்நிலையிலும் உள்ளது.

காயம்பட்ட யானை கேரள எல்லைக்குள் சென்றால் அங்குள்ள வனத்துறையினர் உணவு அளித்தும், அதேபோல் தமிழக எள்ளிகளுள் வந்தால் இங்குள்ள வனத்துறை உணவளித்தும் வருகின்றனர். குறிப்பாக தென்னங்குருத்து, பலாப்பழம் உள்ளிட்டவை அளித்து வருகின்றனர். இதில், யானைக்கு அளிக்கப்படும் உணவில் அதற்கு தேவையான மருந்தும் வைத்து தரப்படுகிறது. இந்நிலையில், யானையில் உடல் மெலிந்து காணப்படுவதால், உடல் உபாதைகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 2 மாநில வனத்துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளனர். ஒற்றை யானையின் உலாவால் மக்கள் யாரும் வெளியிலோ அல்லது காட்டுக்குள் மேய்ச்சலுக்கோ செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


Tags : Tamil Nadu ,Kerala , Tamilnadu-Kerala border, injury, wild elephant, treatment, public
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...