சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கு: எஞ்சியவர்களை பிடிக்க கோவை விரைந்தது தனிப்படை போலீஸ்..!

கோவை: சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் எஞ்சியவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கோவை விரைந்தது. சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலை ரசாக் கார்டன் பகுதியில் பெட்பேங்க் என்னும் தங்க நகைகளுக்கு பணம் கொடுக்கும் வங்கி மேலாளராக தி.நகரை சேர்ந்த சுரேஷ்(38) மற்றும் நகை மதிப்பீட்டாளர் விஜயலட்சுமி (36) உட்பட 3 பேர், 13ம் தேதி பணியில் இருந்தனர். பட்டப்பகலில் அவர்களை கட்டிப்போட்டனர். பின்னர், அவர்களிடம் இருந்த ‘ஸ்ட்ராங் ரூம்’ சாவியை எடுத்து அறையை திறந்து, அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர், போலீசாரின் தீவிர வேட்டையில், கொள்ளையர்கள் சந்தோஷ், பாலாஜி, செந்தில் குமார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேர் அளித்த தகவலின் படி இந்த கொள்ளையின் முக்கிய குற்றவாளியான முன்னாள் மேலாளர் முருகனை தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை சென்னை திருமங்கலம் பகுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய 1 பைக் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்து 32 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளி முருகன் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார்கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை தொடர்ந்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட சூர்யா, கூட்டாளிகள் கோவையில் தங்கியிருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொள்ளையர்கள் கோவையில் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை விரைந்தது.

Related Stories: