இந்தாண்டு சிறப்பு தணிக்கை மூலம் அரசுக்கு ரூ.158 கோடி வருவாய்; ஜிஎஸ்டி மண்டல தலைமை ஆணையர் தகவல்

சென்னை: நுங்கம்பாக்கம் சரக்கு, சேவை மற்றும் மத்திய கலால் வரி அலுவலகத்தில் (GST)தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, ஜிஎஸ்டி அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது அவர், ‘சென்னை மண்டல ஜிஎஸ்டி கடந்த ஆண்டு விட 25 சதவீதம் அதிகமான வரியை வசூலித்துள்ளது. வெளி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் தமிழ் கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற கதாநாயகர்களை கொண்டாட வேண்டிய தருணம் இது.

அவர்களுடைய தியாகத்தை போற்ற வேண்டிய தருணம் இது. நமது வேலைகளை கடைமை உணர்ச்சியுடன் செய்தலும், வரியை சரியாக செலுத்துவதும் நாட்டுப்பற்றாகும். நமது எல்லைகளில் இருக்கின்ற படைவீரர்கள் கவனக்குறைவாக இருந்தால் என்ன விளைவு ஏற்படுமோ அதே விளைவுதான் நாம் கவனக்குறைவாக இருந்தால் ஏற்படும்.

சிறு மற்றும் நடுத்தர வியாபார நிறுவனங்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை குறைதீர்க்கும் நாள் நடத்தப்பட்டு வருகிறது. இணையதள வழியாக வரியை கட்டும் முறையான இ-இன்வாய்ஸிங் முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பான தணிக்கையின் மூலமாக 158 கோடி ரூபாய் வருவாயை சென்னை ஜிஎஸ்டி மண்டலம் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 113 சதவீதம் அதிகமாகும்’என்றார்.

Related Stories: