160-வது ஆண்டு நிறைவையொட்டி உயர் நீதிமன்ற படத்துடன் தபால்தலை தலைமை நீதிபதி வெளியிட்டார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த சுதந்திரதின விழாவில், தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று தேசிய கொடியை ஏற்றிவைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் உயர் நீதிமன்றத்தின் 160வது ஆண்டு நிறைவையொட்டி, உயர் நீதிமன்ற படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட்டார். இதை தொடர்ந்து 20 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 4 ஓட்டுநர்களுக்கு தங்க பதக்கங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா உள்ளிட்ட நீதிபதிகள், தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், உறுப்பினர்கள் கே.பாலு, பிரிசில்லா பாண்டியன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி லூயிசாள் ரமேஷ், லா அசோசியேஷன் தலைவர் எல்.செங்குட்டுவன், உயர் நீதிமன்ற பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இதை தொடர்ந்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் நடந்த நிகழ்ச்சியில் பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தேசிய கொடி ஏற்றினார்.

Related Stories: