கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்; தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றினர்

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் நேற்று தேசியக்கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினர். மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 76வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாவட்ட செயலாளர் சிற்றரசு, திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், அமைப்பு துணை செயலாளர் அன்பகம் கலை, பகுதி செயலாளர் மா.பா.அன்பு துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில், மூத்த தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, செல்லக்குமார் எம்பி, துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா, மாநில செயலாளர் சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், டில்லி பாபு, ஆர்.டி.ஐ.பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேவாதள பிரிவு சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரசார் சத்தியமூர்த்திபவனில் இருந்து அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலை வரை பாதயாத்திரை சென்றனர்.

தி.நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தேசிய கொடியை ஏற்றினர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எச்.பி.ஹண்டே, மூத்த தலைவர் எச்.ராஜா, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, வினோஜ் பி.செல்வம், பால்கனகராஜ், நடிகை குஷ்பு, மாநில செயலாளர் டால்பின்ஸ்ரீதர், கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை  அலுவலகத்தில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்பி தலைமையில் தேசிய கொடி  ஏற்றப்பட்டது. தமாகா துணை தலைவர்கள் வேணுகோபால், சக்திவடிவேல், மாவட்ட  தலைவர்கள் முனவர் பாஷா, சைதை மனோகரன், வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் முத்தரசன், துணை பொது செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து  சிறப்புரையாற்றினார். கட்சியின் செங்கொடியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றினார். இதில் மாநிலக்குழு  உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, வெ.ராஜசேகரன், சிந்தன், ஆர்.சுதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைமை அலுவலகத்தில் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ரத்தினம், வர்த்தகர் அணி பொதுச்செயலாளர் ஜாபர் அலி உஸ்மானி, மாவட்ட தலைவர் இஸ்மாயில், பொதுச்செயலாளர் எஸ்.வி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் எம்.முஹம்மது சேக் அன்சாரி தேசிய கொடி ஏற்றினார். இதில் மாநில செயலாளர் நாகூர் மீரான், மண்டல தலைவர்  பக்கீர் முஹம்மது, மண்டல செயலாளர்  அஹ்மத்முஹைதீன் என்ற குட்டி, மாவட்டத் தலைவர் அபூபக்கர் சாதிக்,  தலைமை நிலைய செயலாளர் எம்.அப்துல் ரசாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமுமுக-மமக தலைமையகத்தில் துணை பொதுச் செயலாளர் எம்.யாகூப் தேசியக் கொடியை ஏற்றினார். இதில் தலைமை பிரதிநிதி வெங்கலம் ஜபருல்லா, மாவட்டத் தலைவர் கே.அப்துல் சலாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமக தலைமை அலுவலகத்தில் மாநில பொருளாளர் சுந்தரேசன் தேசிய கொடியை  ஏற்றினார். இதில் துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம், வர்த்தகரணி துணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல பல்வேறு அரசியல் கட்சி அலுவலத்தில் கட்சியின் தலைவர்கள் தேசிய  கொடியை ஏற்றினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு ேநாட்டு புத்தகங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டது.

Related Stories: