கோயம்பேடு மார்க்கெட்டில் நிர்வாக முதன்மை அலுவலர் தேசிய கொடி ஏற்றினர்

அண்ணாநகர்: சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகளும் கடந்த 13ம் தேதி முதல் தங்களது கடைகள் முன் தேசிய கொடியை ஏற்றினர். இங்குள்ள காய்கறி, பழம் மற்றும் பூ, உணவுதானியம் ஆகிய மார்க்கெட்டில் சுமார் 5,000 கடைகளில் தேசிய கொடியை ஏற்றினர். இந்த நிலையில், நேற்று காலை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி, மார்க்கெட் வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து மக்களுக்கு இனிப்பு, உணவுகள் வழங்கினார்.

கோயம்பேடு மார்க்கெட் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் தலைமையில், கூலி தொழிலாளர்களுக்கு மழை கோட் மற்றும் துணிகள், சிறுவர்களுக்கு பாட புத்தகம் வழங்கினார். அனைத்து வியாபாரிகளும் வணிக வளாகத்தை காக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Related Stories: