சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல்

சென்னை: சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறைக்காக, சென்னையில் பணிபுரியும் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்றிருந்தனர். இந்நிலையில், நாளை வழக்கம் போல பணிநாள் என்பதால் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர துவங்கியுள்ளனர்.

அரசு சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்து கொண்டு இருக்கின்றனர். அதிகப்படியான வாகனங்களின் வருகையால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: