சர்ச்சுக்கு வந்த சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை: பாதிரியார் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கொடியன் (63). அருகிலுள்ள உள்ள வராப்புழா செயின்ட் தாமஸ் சர்ச்சில் பாதிரியாராக இருந்து வருகிறார். இவர் சர்ச்சுக்கு வரும் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் பாதிரியார் ஜோசப்பின் கொடுமை அதிகரித்தது. இது குறித்து அந்த சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளான். அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் வராப்புழா போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியார் ஜோசப் கொடியனை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணைக்காக அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும்போது திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். பின்னர் போலீசார் அவரை சிகிச்சைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த பின் பாதிரியார் ஜோசப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தீர்மானித்துள்ளனர்.

Related Stories: