தமிழ் சினிமாவில் நெப்போடிசமா அதிதி ஷங்கர் பதில்

சென்னை: கார்த்தி நடித்த விருமன் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அவர் கூறியது: சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆசை இருந்தது. அப்போது சொல்லியிருந்தால் அப்பா எனது பேச்சை கேட்டிருக்க மாட்டார். அப்பாவின் விருப்பப்படி நல்லா படித்துவிட்டு, பிறகு எனது விருப்பத்தை சொல்ல நினைத்தேன். அதேபோல் சொன்னேன். அதை கேட்டு அப்பா அதிர்ச்சியடைந்தார். சினிமாவுக்கு செல்ல வேண்டும் என நீ கேட்டபோது, இசை துறையாக இருக்கும் என நினைத்தேன். நடிக்க விரும்புவாய் என நினைக்கவில்லை என்றார். அப்பாவாக எனக்கு இது அதிர்ச்சி தந்தாலும் டைரக்டராக, நான் சினிமா மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் உனக்கு தடை போட மாட்டேன் என சொன்னார்.

அதே சமயம், என்னை சார்ந்து இருக்காமல், உனது திறமையால் நீ ஜெயிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். நெப்போடிசம் பற்றி கேட்கிறார்கள். வாரிசுகள் பெற்றோர் இருந்த துறைக்கு வருவது அரிதான விஷயம் கிடையாது. ஆனால் பெற்றோரை போல், அவர்களாலும் ஜெயிக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி. முதல் படம் வாரிசு என்பதால் கிடைத்துவிடலாம். ஆனால் அடுத்தடுத்த வாய்ப்பு அதுபோல் கிடைக்காது. திறமை இல்லாவிட்டால் யாராக இருந்தாலும் அவர்களை ரசிகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதனால் மற்ற விஷயங்களை பற்றியெல்லாம் நான் சிந்திப்பதில்லை. திறமையை மட்டும் நம்புகிறேன். இவ்வாறு அதிதி ஷங்கர் கூறினார்.

Related Stories: