லண்டன் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா சாதனை

லண்டன்: சைக்கிளிங்கில் நீண்ட தூரம் பயணிக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார் நடிகர் ஆர்யா. ஆர்யாவுக்கு சைக்கிளிங் பிடித்தமான விஷயம். சென்னையில் இருக்கும்போது, ராண்டன்னியூரிங் எனப்படும் நீண்ட தூர சைக்கிள் பயணத்தை மேற்கொள்வார். இதற்கான போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். தேசிய அளவில் பல போட்டிகளில் பங்கேற்ற அவர், முதல்முறையாக சர்வதேச போட்டியிலும் பங்கேற்க பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் லண்டன் எடின்பர்க் லண்டன் என்ற போட்டிக்கு விண்ணப்பித்து இருந்தார். இதில் கலந்துகொள்ள ஆர்யாவுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து சென்னையிலுள்ள தனது சைக்கிளிங் டீமுடன் சென்று இதில் பங்கேற்றார்.

இங்கிலாந்து நாட்டிலுள்ள குறிப்பிட்ட நகரத்திலிருந்து 1540 கிலோ மீட்டர் பயணமாகி, லண்டனுக்கு சைக்கிளில் வந்து சேரும் இந்த போட்டியில் ஆர்யாவும் அவரது குழுவினரும் பங்கேற்றனர். இந்த சைக்கிளிங் சாதனை படைக்கும் முதல் நடிகர் என்ற பெருமையை ஆர்யா பெற்றுள்ளார். இது குறித்து டிவிட்டரில் ஆர்யா கூறும்போது,‘எனது குழுவுடன் லண்டன் எடின்பர்க் 1540 கிமீ சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவுற்றது. என் வாழ்க்கையில் மிகவும் சவாலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு நன்றி’என கூறியுள்ளார். ஆர்யாவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

Related Stories: