அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, கிர்கானில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனைக்கு நேற்று தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இதில் பேசிய மர்மநபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காலை 10.30 மணியளவில் தொடர்ந்து நான்கு முறை தொலைபேசியில் அழைத்து மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, மும்பை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தகிசார் பகுதியை சேர்ந்த ஒரு நபரை கைது செய்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: