சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை விருகம்பாக்கத்தில் நடந்தது. இதில் சங்க தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச்செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் ஜெயந்த், துணை தலைவர்கள் பரத், ராஜ்காந்த் மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் மற்றும் ரமேஷ்கண்ணா, பேரரசு, ஜாகுவார் தங்கம், ஆர்.வி.உதயகுமார்,  சோனியா போஸ் வெங்கட், பாபு கணேஷ், நிரோஷா, காத்தாடி ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: