நியூயார்க்: கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகை ராபின் கிரிக்ஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பென்சில்வேனியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை ராபின் கிரிக்ஸ் (49) கடந்த மாதம் வெளியிட்ட பதிவில்,‘எனது கல்லீரலில் இரண்டு புதிய கட்டிகள், வயிற்று தசையில் ஒன்று மற்றும் வலதுபக்க நிணநீர் முனையில் பெரிய கட்டிகள் உள்ளன’என்று தெரிவித்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மேலாளர் வெளியிட்ட அறிவிப்பில்,‘கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராபின் கிரிக்ஸ் காலமானார்.