மோகன் பகவத் பேச்சு: மக்களிடம் தேசபக்தியை வளர்த்தது ஆர்எஸ்எஸ்

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், ‘‘அமைதி என்ற செய்தியை இந்தியா உலகுக்கு வழங்கும். இந்த நாடோ அல்லது சமூகமோ எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு மாறாக நாட்டுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவோர் எல்லாவற்றிலும் தன்னிறைவு பெறவேண்டும். தேசப்பக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதனை மக்களிடையே புகுத்தவும் ஆர்எஸ்எஸ் பணியாற்றி உள்ளது’’ என்றார்.

Related Stories: