சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐதராபாத்: பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடித்தபடியே நாக் அஸ்வின் இயக்கும் படம், ஆதி புருஷ் ஆகிய படங்களிலும் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.

Related Stories: