தூத்துக்குடி துறைமுகத்தில் ஹைட்ரஜன் பூங்கா

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிய ஹைட்ரஜன் பூங்கா அமைய உள்ளதாக துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு  தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அங்கு பள்ளி மாணவர்கள் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட மூவர்ண கொடி பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.

விழாவில் துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் பேசுகையில், நாட்டில் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பிரதமரின் கதிசக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் உள்கட்டமைப்புகளால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். மேலும் வஉசி துறைமுகத்தில் புதிதாக ஒரு ஹைட்ரஜன் பூங்கா அமையப்பெற உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் நடப்பாண்டில் 34.12 மில்லியன் டன் சரக்குகளும், 7.81 லட்சம் சரக்கு பெட்டகங்களும் கையாண்டுள்ளது. இத்துறைமுகத்தில் புதிதாக 2 சரக்கு பெட்டங்க தளங்கள் உருவாக்குதல், ஒன்று முதல் நான்கு வரை உள்ள சரக்கு தளங்களை சரக்கு பெட்டக தளமாக மாற்றுதல் உள்ளிட்ட ரூ.7164 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வடக்கு சரக்கு தளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கபட்டு 2023ம் ஆண்டுக்குள் முடிவடையும்.  துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மற்றும் வகையில் 60 மெகாவாட் சூரிய ஒளி மின் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட உள்ளது’ என்றார்.

Related Stories: