சுதந்திர தின விழா கொண்டாட்டம்; புதுவை முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்: சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கினார்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கி

கவுரவித்தார். புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.  

முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதை நடந்து சென்று பார்வையிட்டார்.  பின்னர், முதல்வர் சுதந்திர தின உரையாற்றினார். அதன்பின், சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Related Stories: