டெல்லி பயணத்தின்போது தமிழக திட்டங்கள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசுவார்; டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்

சென்னை : புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிச்சூர் முதல் நிலை ஊராட்சி பகுதியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் சிந்துலேகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறுகையில்:‘‘முடிச்சூர் பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.

எனவே தமிழக முதல்வர் நேரடியாக இப்பகுதிகளுக்கு மூன்று முறை வந்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து போர்க்கால அடிப்படையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். எனவே மழைக்காலம் வருவதற்கு முன்பு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மக்கள் கருத்துகளை கேட்டு அறிந்து அதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.0டெல்லி செல்லும் முதல்வர் 17ம் தேதி பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்திக்கின்றார். இதில் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க சந்திக்கவிருக்கிறார். பிரதமரை சந்தித்து தமிழ்நாடு திட்டங்கள் குறித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது நிதி பற்றாக்குறை குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்து திட்டங்களை விரைவாக முடித்து தர கோரிக்கை விடுப்பார்.

Related Stories: