மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், கடந்த 2 நாட்களாக 88 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 80 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.  மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து 85 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில், நேற்று நண்பகல் 65 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.

அணையின் நீர்மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 42,000 கனஅடி வீதமும், மொத்தம் 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி.

Related Stories: