உலகின் பல நாடுகளும் இந்தியாவுக்கு வாழ்த்து

வாஷிங்டன்: நாட்டின் 76வது சுதந்திர  தினத்தை ஒட்டி  உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல  தலைவர்கள் இந்திய சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்து செய்தியில்,‘அண்ணல் காந்தியின் வாய்மை மற்றும் அகிம்சை என இரு கோட்பாடுகளின் வழியின் விடுதலை அடைந்த இந்தியாவின் ஜனநாயகத்திற்கு வாழ்த்துக்கள். இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நல்லுறவைப் பேணும் கூட்டாளிகளாக நீண்ட காலம் திகழ்ந்து வருகிறது.

எதிர்வரும் காலங்களிலும் இந்திய அமெரிக்க நல்லுறவு தொடர்ந்து இரு நாட்டு மக்களும் அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பை அடைந்து மேம்பட்ட வாழ்வை அடைவார்கள் என நம்புகிறேன்’என தெரிவித்துள்ளார். இதேபோல் ரஷ்யா, இங்கிலாந்து, பஹ்ரைன், நேபாளம் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளன.

Related Stories: