சென்னையில் சுதந்திர தினத்தையொட்டி 33 கோயில்களில் சிறப்பு வழிபாடு; சபாநாயகர், அமைச்சர்கள் பங்கேற்பு: வடை, பாயாசத்துடன் அறுசுவை உணவு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 33 கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பங்கேற்றனர். பொது விருந்தில் வடை பாயாசத்துடன் அறுவை உணவு பரிமாறப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் 33 கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு  மற்றும் பொது விருந்து நேற்று நடைபெற்றது. தேனாம்பேட்டையில் உள்ள பாலசுப்பிரமணிய கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்-அமைச்சர் ஐ.பெரியசாமி, திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்-அமைச்சர் சா.மு.நாசர், மயிலாப்பூர் பார்த்தசாரதி கோயில்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பிராட்வே  காளிகாம்பாள் உடனுறை கமடேஸ்வரர் கோயில்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், திருவான்மியூர் பாம்பன் கோயில்-அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை தங்கசாலை தெரு ஏகாம்பரேசுவரர் கோயில்- அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில்-அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில்- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில் - அமைச்சர் மதிவேந்தன்.

பூங்காநகர் கந்தசாமி என்ற முத்துகுமார சாமி கோயில்-அமைச்சர் செந்தில் பாலாஜி, அரண்மனைக்காரன் தெரு கச்சாலீசுவரர் கோயில்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்ன கேசவ பெருமாள் கோயில்-அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில்-அமைச்சர் பி.கீதா ஜீவன், கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயில்- அமைச்சர் பி.மூர்த்தி, மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் மற்றும் கோதண்டராமர் கோயில்- அமைச்சர் சி.வி.கணேசன், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில்- அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாடி திருவல்லீஸ்வரர் கோயில்-அமைச்சர் சக்கரபாணி, அமைந்தகரை அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயில்- அமைச்சர் கே.என்.நேரு, சென்னை பள்ளியப்பன் தெரு அருணாச்சலேசுவரர் கோயில்- துணை சபநாயகர் கு.பிச்சாண்டி, அயன்புரம் பரசுராம லிங்கேஸ்வரர் கோயில் -அமைச்சர் மனோ தங்கராஜ், திருவட்டீஸ்வரன்பேட்டை திருவட்டீஸ்வரர் கோயில்- அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் சாதம், கதம்ப சாம்பார், மோர், உருளைக்கிழங்கு கூட்டு, முட்டை கோஸ் பொறியல், வடை, மாங்கா ஊறுகாய், அப்பளம், பாயாசம், கேசரி அல்லது சுவிட் பரிமாறப்பட்டது.

Related Stories: