ஓபிஎஸ்,இபிஎஸ் கடிதம் தொடர்பாக நியாயமான முடிவு எடுக்கப்படும்: சபாநாயகர் அப்பாவு பேட்டி

சென்னை: அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். மேலும் ஓபிஎஸ்,  இபிஎஸ் கடிதம் தொடர்பாக நியாயமான, விருப்பு வெறுப்பு  இல்லாமல் முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

75-வது சுதந்திர தினத்ைத முன்னிட்டு சென்னைதேனாம்பேட்டை முருகன் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி கோயில்களில் சமபந்தி விருந்து நேற்று நடைபெற்றது. தேனாம்பேட்டை முருகன் கோவிலில் பொதுமக்களுடன் அமர்ந்து நான் உணவருந்தினேன். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் விருப்பு, வெறுப்பின்றி சட்டசபை நடைபெறுகிறது.

மேலும் தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் உள்ள விவகாரம் பற்றி நான் பொதுவெளியில் பேச முடியாது. அதிமுக ஒன்றாக, நன்றாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம், ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம் தொடர்பாக நியாயமாக முடிவு எடுக்கப்படும். விருப்பு வெறுப்பு இல்லாமல் முடிவு எடுக்கப்படும்.

Related Stories: