×

குழப்பம் வேண்டாம்; 11ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற செய்தி எப்படி வெளிவந்தது? என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களை பொறுத்தவரையில் எப்போதும் இருக்கக்கூடிய தேர்வு முறைதான் இருக்கும்.

பொதுவாக தனியார் பள்ளிகள் 11-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே நேரடியாக 12-ம் வகுப்பு பாடத்தை நடத்தி, அதில் மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைக்கவேண்டும். தங்கள் பள்ளி அதில் சிறந்துள்ளது என்று காட்ட வேண்டும் என்று சென்றுவிடுகிறார்கள். 11-ம் வகுப்பு பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போய்விட்டால், போட்டித் தேர்வுகளின் போது மாணவ-மாணவிகள் சிக்கிக்கொள்வார்கள். அதனை கருத்தில்கொண்டு தான் இந்த 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரையில் அதனை ரத்து செய்வது தொடர்பான எண்ணம் எதுவும் இல்லை. மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை. வழக்கமான நடைமுறையின்படியே 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister Love Mahesh Mati , Don't get confused; There is no intention to cancel the 11th general examination: Minister Anbil Mahesh interview
× RELATED இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச...