×

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.! எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பெரியார் பற்றி அவதூறாக பேசி இருந்தார். இதையடுத்து கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடியானது. இந்தநிலையில் புதுவையில் வைத்து கனல் கண்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை போலீசார் தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.  பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Ganal Kannan ,Lumpur Court , Controversy over Periyar statue; Kanal Kannan remanded till August 26. Egmore court order
× RELATED கனல் கண்ணனின் ஜாமீன் நிபந்தனையை நிறுத்தி வைத்தது ஐகோர்ட்