கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 49 வயதில் ஹாலிவுட் நடிகை மரணம்

நியூயார்க்: கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகை ராபின் கிரிக்ஸ் என்பவர்  சிகிச்சை பலனின்றி இறந்தார். பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகை ராபின் கிரிக்ஸ் (49) கடந்த மாதம் வெளியிட்ட பதிவில், ‘எனது கல்லீரலில் இரண்டு புதிய கட்டிகள், வயிற்று தசையில்  ஒன்று மற்றும் வலதுபக்க நிணநீர் முனையில் பெரிய கட்டிகள் உள்ளன’ என்று தெரிவித்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அவரது மேலாளர் வெளியிட்ட அறிவிப்பில், ‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால்  பாதிக்கப்பட்டிருந்த ராபின் கிரிக்ஸ் காலமானார். ‘ஒன் லைஃப் டு லைவ்’, ‘அனதர் வேர்ல்ட்’ போன்ற படங்களில் நடித்த இவர், திகில் படங்களில் நடித்து பிரபலமானவர்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அவரது தந்தை ராபின் வெளியிட்ட பதிவில், ‘இன்று அல்லது நாளை அவர் அந்த காப்பகத்தில் (மரணம்) நுழைவார். மிகுந்த உறுதியுடனும், வலிமையுடனும் தனக்கு ஏற்பட்ட நோயுடன் அவர் போராடினார். கடினமான இந்த நேரத்தில் அவருக்காக பிரார்த்திப்போம்’ என்று குறிப்பிட்டு இருந்தார். நடிகை ராபின் கிரிக்ஸ்யின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: