×

பொதுமக்களை கவரும் வகையில் சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்படங்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (15ம் தேதி) சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நகர், கிராமப்புறங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடியேற்றப்படுகிறது. 75-வது சுதந்திர தினம் என்பதால், இந்திய நாட்டின் பெருமையை உணத்தும் வகையில், வீடுகள் மற்றும் பொது இடங்களில் மூவர்ண கொடியேற்றப்படுகிறது. இது  மட்டுமின்றி, இந்திய சுதந்திரம் அடைவதற்கு காரணமான தியாகிகள் குறித்து, தேசபற்று மிக்க பல எதியாகிகளின் புகைபடங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், நகராட்சிக்குட்பட்ட பாலகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் அருகே, பல்வேறு சுதந்திர தியாகிகளின் புகைப்படத்தை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதில், காந்தியடிகள் மற்றும் காமராஜர், நேரு, பாரதியார், கப்பலோட்டிய தமிழன், தில்லை வள்ளிநாயகம், சுபாஷ் சந்திரபோஷ், கொடிகாத்த குமரன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட பல்வேறு சுதந்திர தியாகிகள் புகைபடங்கள் அடங்கியுள்ளது. இந்த புகை படங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags : Photographs of freedom struggle martyrs to attract the public
× RELATED சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி...