×

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் அதிகரித்து, 450 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் நேற்று முட்டை விலையில் 20 காசுகள் உயர்த்தினார். இதையடுத்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 430 காசுகளில் இருந்து 450 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு, முட்டை விலை 20 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் 20 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Namakkal Mandal , Egg price hiked by 20 paise in Namakkal Mandal
× RELATED நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசு குறைந்தது