×

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆக.17ல் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யக்கூடும். ஆக.18ல் நீலகிரி, கோவை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு ஆந்திர கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது; மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Weather Centre , Heavy rain likely for 3 days from tomorrow in Tamil Nadu: Meteorological Department information
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...