தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாட்டம்...

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில்  சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். உயர்நீதி மன்றத்தின் 160வது ஆண்டை அவர் நினைவு கூறும் வகையில் தலைமை நீதிபதி முனீஸ்வரன் நாத் பண்டாரி சிறப்பு தபால் தலையை வெளியிட, நீதிபதி துரைசாமி அதனை பெற்று கொண்டார்.

மதுரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புதுக்கோட்டையில் சுதந்திர தினவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. சேமப் படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசிய கொடியை ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் சுந்திர தின அணிவகுப்பு ரசிக்கும் படி அமைந்திருந்தது. சேலத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற காவல் துறையினரின் கண்கவர் அணிவகுப்பு பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. 

Related Stories: